202001221246336819_Jallikattu--ulakampatti-Bullying-in-the-bulls12-people_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

திண்டுக்கல் : உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்

 

திண்டுக்கல் : உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்திண்டுக்கல் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

பதிவு: ஜனவரி 22,  2020 12:46 PM
 
திண்டுக்கல்
 
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில், ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரமாக தொடங்கியுள்ளது. புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில், 550 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடி வாசல் வழியே சீறிப் பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
 
 
மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள போட்டியில், வெற்றிபெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசு, வெள்ளிக் காசு, பீரோ, பிரிட்ஜ் என விதவிதமான  பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.