202001221637321427_Vanavil-Techno-Spark-Co-Plus_SECVPF
Ads விளம்பர செய்திகள்

‘ஸ்பார்க் கோ பிளஸ்’

 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ இந்திய சந்தையில் ‘ஸ்பார்க் கோ பிளஸ்’ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 22,  2020 16:37 PM
 
6.5 அங்குலம் தொடு திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,299 ஆகும்.  விரல் ரேகை உணர் சென்சார் இதன் பின்பகுதியில் உள்ளது. இதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ 22 பிராசஸர் உள்ளது. 
 
இதில் 2 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை 128 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது.
 
 
இதன் முன்புற மற்றும் பின்புறங்களில் உள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. டியூயல் எல்.இ.டி. பிளாஸ் வசதி உள்ளது. வை-பை, புளூடூத், ஜி.பி.எஸ். கொண்டது. 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. நீலம், பர்பிள் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.